Tamilசெய்திகள்

GATE தேர்வை ஒத்திவைக்கும்படி உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம்

பொறியியல் தேர்வின் பட்டப்படிப்பு திறன் தேர்வு நாளைமறுதினம் (பிப்ரவரி 5-ந்தேதி) நடைபெற இருக்கிறது. 9 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத இருக்கும் நிலையில், சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் மனு செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இன்று டி.ஒய். சந்திரசூட், சூர்ய காண்ட், விக்ரம் நாத் நீதிபகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது. இது தேர்வு முடிவில் குழப்பத்தையும், உறுதியற்ற தன்மையையும் ஏற்படுத்தும். மேலும், தேர்வுக்க தயாரான மாணவர்களின் படிப்பு வாழ்க்கையுடன் விளையாட முடியாது.

இது அகாடமி கொள்கையுடன் சேர்ந்தது. தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றபோது, நீதிமன்றம் அதன் வரைமுறைக்குள் நுழைய முடியாது.

9 லட்சம் மாணவர்கள் 20 மையங்களில் தேர்வு எழுத இருக்கிறார்கள். ஆனால், தேர்வுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரிகள் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.

GATE தேர்வு முதுநிலை திட்டம், சில பொதுத்துறை நிறுவனங்களில் ஆள்சேர்ப்பிற்காக அறிவியல் மற்றும் இளங்கலை பாடங்களின் புரிதலை சோதிப்பதற்கான நடத்தப்படும் தேர்வாகும்.