கங்குலி ட்வீட்டால் இங்கிலாந்து வீரருக்கு ஐபிஎல் அணியிடம் வரவேற்பு!

இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக டி20 போட்டியில் அதிக அளவில் விளையாடியது கிடையாது.

இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஜோ ரூட் 2018 ஐபிஎல் சீசனில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் ஜோ ரூட் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தார்.

தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். பல்லேகெலேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஜோ ரூட்டின் ஆட்டத்தை கங்குலி டுவிட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டினார்.

அப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஜோ ரூட் மற்றும் ஜிண்டால் ஆகியோருக்கு ‘டேக்’ செய்திருந்தார். ஜிண்டால் சவுத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ்-தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீதம் பங்குகளை வாங்கியுள்ளது. மேலும், கங்குலி அவரின் ஆலோசகராக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஜோ ரூட் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறும் ஐபிஎல் தொடரின்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஏலத்தில் ஜோ ரூட்டின் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools