கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நன்கொடை வழங்கப்படுகிறது. சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சேர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக நன்கொடை அளிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும், திரைப்படக் கூட்டமைப்பிலிருந்து பலரும் நன்கொடை அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.