கஜா புயல் நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடியே ஒரு லட்சம் வழங்கிய லைகா

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிவாரணம் வழங்கியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், லைகா நிறுவனம் ரூ.1 கோடியே 1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools