புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால நடவடிக்கை – முதல்வர் உத்தரவு

கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

பின்னர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சாரத்துறை, பேரிடர் மற்றும் மீட்புத்துறை, சுகாதாரத்துறைகளின் பணிகளை முடுக்கி விட வேண்டும்.

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவும், புயலால் பாதிக்கப்பட்டோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்யவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools