X

24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் கஜா புயல்!

வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் கடலூருக்கும் – பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை இந்திய வானிலை மையம், “ஜா புயல் 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது. சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மேற்கு – தென்மேற்கு நோக்கி நகரும் கஜா, 15-ந்தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.