பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் மொகமது ஹபீஸ் 45 ரன்னும், சர்ப்ராஸ் அகமது 34 ரன்னும் அடித்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. காலின் மன்ரோ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு ராஸ் டெய்லர் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 42 ரன்னில் அவுட்டாகாமல் இருந்தார்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஒருபுறம் ராஸ் டெய்லர் நின்றாலும், அந்த ஓவரில் 2 பவுண்டரி உள்பட 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான். இந்த வெற்றியை தொடர்ந்து, பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.