இங்கிலாந்து வீரரின் சாதனையை முறியடித்த சாகிப் அல் ஹசன்
வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வங்காளதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
இதன்மூலம் டெஸ்டில் அவர் 200 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவர் ஏற்கனவே 3 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார். குறைந்த டெஸ்டில் 200 விக்கெட் கைப்பற்றி, 3 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை சாகிப் அல் ஹசன் எட்டினார்.
இதன்மூலம் போத்தம் சாதனையை முறியடித்தார். இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் போத்தம் 55 டெஸ்டில் இதனை கடந்து இருந்தார். 31 வயதான சாகிப் அல் ஹசன் டெஸ்டில் 3727 ரன் எடுத்துள்ளார். 201 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.