கமல் மீது கடுப்பான பெண் இயக்குநர்!
இயக்குனர் பிரியதர்ஷினி முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘த அயர்ன் லேடி’ என்ற பெயரில் படமாக்கும் முயற்சியில் உள்ளார். படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க சசிகலா வேடத்துக்கு முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியிடப்பட்டது விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இதற்கிடையே கமல்ஹாசனிடம் இந்த பட முயற்சி பற்றி கேட்டதற்கு அவர் ’இந்த படம் ஒருதலைபட்சமானது’ என்று விமர்சித்தார்.
கமலின் இந்த விமர்சனத்தினால் கடுப்பான இயக்குநர் பிரியதர்ஷினி, “‘த அயர்ன் லேடி’ படத்தை ஒருதலைபட்சமானது என்று விமர்சித்த கமல்ஹாசனுக்கு, மக்கள் எழுச்சி என்பார், மாணவர் புரட்சி என்பார், ஊர்கூடி தேர் இழுப்போம் என்று இவர் தம் நோக்கம் அறியா மக்களை மய்யமாக கொண்டு பேசுவார்.
ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்பு புரட்சியை எல்லாம் தள்ளிவிட்டு ஓட்டு வங்கிக்காகவும், சுயநலத்தோடும் பல ஆண்டுகளுக்கு பின்பு தேவர் மகன் 2 எடுத்து கொண்டாட இருக்கிறார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வாரா?. உண்மை போல் தோற்றம் அளிக்கும், வேஷம் போடும் மனிதர்களை நிந்தை செய்.” என்று கமலை விமர்சித்திருக்கிறார்.