20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் டோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் இப்போதைய ஜாம்பவான்களில் ஒருவராக இருப்பவர் தோனி. தோனி 93 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1487 ரன்களை குவித்துள்ளார்.

எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், விக்கெட் கீப்பர் இடத்துக்கு வீரர்களை நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக விளையாட உள்ளார்.

டி20 போட்டியில் இருந்து தோனி முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள தேர்வுக்குழுத்தலைவர் பிரசாத், முழுமையாக ஓய்வு பெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலி ஓய்வு பெறுவதாகவும், அவருக்கு பதிலாக பொறுப்பு கேப்டனாக ரோஹித் ஷர்மா விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools