வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தணிக்கைக் குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாகிறது.
தனுஷ் தற்போது வரலாற்று கதையம்சம் கொண்ட படமொன்றை இயக்கி, நடித்து வருகிறார்.