Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 4, 2018

மேஷம்: பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும்.

ரிஷபம்: மற்றவர்களின் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்ப தேவைகளை முடிந்த அளவு பூர்த்திசெய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் தாமதம் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: வாழ்வில் புதிய அனுபவங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். வெகுநாள் வாங்க விரும்பிய பொருட்கள் வாங்க நேரிடும்.

கடகம்: உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறி போகலாம். தொழில்,வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும்.

சிம்மம்: கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பால் சீராகும்.

கன்னி: பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குளறுபடி சரிசெய்ய புதிய அணுகுமுறை தேவைப்படும்.

துலாம்: எதிர்மறையாக இருந்த சூழ்நிலை மறையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தகுந்த பணிகளில் ஈடுபடுவீர்கள். லாபம் உயரும்.

விருச்சிகம்: உங்கள் மனதில் சோர்வு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.

தனுசு: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்திட கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள்.

மகரம்: வெற்றி நோக்கில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும்.

கும்பம்: கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும்.

மீனம்: பிறர் சொல்லும் அவதுாறு பேச்சை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *