Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 11, 2018

மேஷம்: நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும்.

ரிஷபம்: யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபார வளர்ச்சி சீராகும்.

மிதுனம்: செயலில் திறமை மிகுந்திருக்கும். புதிய வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபார தொடர்பு பலம் பெறும்.

கடகம்: வசீகரத் தன்மையுடன் பேசுவீர்கள். எதிர்ப்பாளர் இடம் தெரியாமல் விலகுவர். தொழில் வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றம் செய்வீர்கள்.

சிம்மம்: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும்.

கன்னி: சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். திட்டமிட்ட செயல் நிறைவேறும் முன் அவசரம் வேண்டாம்.

துலாம்: தவறாக விமர்சித்தவர் கூட குறை உணர்ந்து நெருங்குவர். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும்.

விருச்சிகம்: பேச்சில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். நண்பர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும்.

தனுசு: மனதில் நம்பிக்கை குறைவு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீரான அளவில் இருக்கும்.

மகரம்: முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

கும்பம்: சமயோசிதமாக நடந்து வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த நன்மை முழுஅளவில் கிடைக்கும்.

மீனம்: சிறு பணிகளையும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *