இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 1, 2018

மேஷம்:
அரசாங்க அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும், இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும், நிலம், வீடு வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.. உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும், நண்பர்களால் நன்மை உண்டாகும. பிரயாணம் செல்வீர்கள்.

ரிஷபம்:
அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும், பூர்வீக வீடு கிடைக்கும்., வெளியூர் தொழில் வாய்ப்புகள் மேன்மையடையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, எதிரிகளால் தொல்லை உண்டாகும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 20ம் தேதிக்கு பின்னர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள்..

மிதுனம்:
அரசாங்க அதிகாரிகளின் உதவி கிடைக்கும், தொழில் உத்தியோகம் சிறப்படையும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள், சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும், திருமணமாகாத மகன்களுக்கு திருமணம் நிச்சயமாகும். செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், எதிர்பாரத வகையில் பண வரவு உண்டாகும்.

கடகம்:
உத்தியோகத்தியத்திற்காக அலைச்சல் அதிகரிக்கும். வீடு நிலம் வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும், நண்பர்களால் நன்மை உண்டாகும். வீண் செலவுகளில் கவனம் தேவை புதிதாக வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும், முக வசீகரம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.

சிம்மம்:
அரசாங்க நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், மனதில் நினைப்பவை எல்லாம் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும், பெண்களால் வீண் விரயங்கள் உண்டாகும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

கன்னி:
உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் செயல்கள் எல்லாம் சிறப்படையும் . பண வரவு அதிகரிக்கும், அனைவரிடமும் தன்மையாக பேசுவீர்கள் பெண்களால் நன்மை உண்டாகும், வாகனங்களை ரிப்பேர் செய்து பராமரிப்பு செய்வீர்கள். முயற்சிகள் வெற்றியடையும். உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

துலாம்:
குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள் உயர் கல்வி நிலை சிறப்படையும் 11ம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்., நண்பர்களால் நன்மை ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்..

விருச்சிகம்:
அலுவலக ரீதியாக மனதில் அழுத்தம் உண்டாகும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் நஷ்டம் ஏற்படலாம் கவனம் தேவை தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை, விலை மதிப்பு மிக்க பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்லவும். மனைவியால் நன்மை உண்டாகும் வீண் பேச்சையும் வாக்குவாதத்தையும் தவிர்க்கவும். ஏற்றுமதி தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இடம் மாற்றம் உண்டாகும்.

தனுசு:
அரசாங்க உயர் அதிகாரிகளினால் நன்மை உண்டாகும், வாடகை வருமானம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும், புதிதாக பொன் நகைகள் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் உடல் உழைப்பு அதிகரிக்கும், மனதில் மந்தத் தன்மை உண்டாகும் திடீர் பண வரவு உண்டாகும்.

மகரம்:
செயல்களில் வேகம் அதிகரிக்கும். தாய் மாமனால் தொல்லைக்கு ஆளாக நேரிடும் பண வரவு அதிகரிக்கும், செயல்கள் சிறப்படையும். கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், அதிகமாக செலவழிப்பதை தவிர்க்கவும். மனதில் சஞ்சலம் உண்டாகும்.

கும்பம்:
ஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பண வரவு அதிகரிக்கும், மனதில் நிம்மதி உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், வங்கி சேமிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். திருக்கோயில் வழிபாடுகள் சிறப்பைத் தரும்.

மீனம்:
அரசாங்க வாகன யோகம் உண்டாகும். அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் சமயம் இது. வீடு நிலம் போன்றவற்றிலிருந்து வருமானம் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *