X

இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 30, 2018

மேஷம்: உங்களின் முக்கிய செயல் ஒன்று நிறைவேற தாமதமாகலாம். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும்.

ரிஷபம்: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத் தொடர்பு பலம் பெறும்.

மிதுனம்: உங்கள் செயல் நிறைவேற இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும்.எதிர்மறையாக இருந்த விஷயங்கள் அனுகூலம் தரும்.

கடகம்: அடுத்தவரின் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத்தேவை நிறைவேற தாமதமாகலாம்.

சிம்மம்: செயலில் திறமை வெளிப்படும். அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தருவதாக மாறும்.

கன்னி: சமயோசித புத்தியால் சில நன்மை பெறுவீர்கள்.மனதில் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.

துலாம்: உங்கள் எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். வாழ்வில் வளம் பெற புதிய வாய்ப்பு உருவாகி வளரும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த உதவி குறைந்த அளவில் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும்.

தனுசு: சிலர் சுயநலத்துடன் உங்களிடம் பழகலாம். விழிப்புடன் விலகுவது நல்லது.

மகரம்: எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்: முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமத்தை உடனடியாக சரி செய்வது நல்லது.

மீனம்: முக்கிய விஷயத்தில் சுமுகத்தீர்வு ஏற்படும். பணியை முழுமனதுடன் நிறைவேற்றுவீர்கள்.