X

இன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 19, 2019

மேஷம்: தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் பன்மடங்கு உயரும். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.

ரிஷபம்: மனதில் சஞ்சலம் வந்து விலகும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணிகளை நிறைவேற்றுவது நல்லது..

மிதுனம்: தவறைத் திருத்திக் கொள்ள முயல்வீர்கள். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்..

கடகம்: தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

சிம்மம்: உடல்நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் கவனமுடன் படிப்பதால் தரத்தேர்ச்சி கிடைக்கும்.

கன்னி: உங்கள் பேச்சில் வசீகரம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பை பயன்படுத்துவீர்கள்.

துலாம்: லாபம் சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். சுபவிஷயத்தில் பொறுமை காக்கவும்.

விருச்சிகம்: வருமானம் உயரும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். பணியாளர்கள் பதவி உயர்வு பெற அனுகூலம் உண்டு.

தனுசு: தொழில், வியாபார வளர்ச்சியால் சாதனை படைப்பீர்கள். வருமானம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

மகரம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

கும்பம்:. பிறருக்காகப் பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும்.

மீனம்: நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். பெண்களால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.