Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 21, 2018

மேஷம்: மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படலாம். மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேச வேண்டாம்.

ரிஷபம்: செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற கூடுதல் அவகாசம் தேவைப்படும்.

மிதுனம்: எதிரியினால் உருவான இடையூறுகளை சமயோசிதமாக சரி செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி அதிகரிப்பால் லாபம் உயரும்.

கடகம்: நண்பரிடம் குடும்ப விஷயம் பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவி ஓரளவு கிடைக்கும்.

சிம்மம்: சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். பேச்சு, செயல்களில் உற்சாகம் வெளிப்படும்.

கன்னி: அவசரப்பணியால் பரபரப்பு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும்.

துலாம்: திட்டமிட்ட பணி நிறைவேறி நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும்.

விருச்சிகம்: அனுபவ அறிவால் வாழ்வில் வெல்வீர்கள். மனதில் சாந்த குணம் நிறைந்திருக்கும்.

தனுசு: அறிமுகம் இல்லாத எவரிடமும் பொது விஷயம் பேச வேண்டாம். தொழில் வியாபாரம் மந்த கதியில் இயங்கும்.

மகரம்: திட்டமிட்ட பணிகள் நிறைவேற தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற கூடுதல் முயற்சி தேவைப்படும்.

கும்பம்: உறவினர்களின் அன்பான பேச்சு ஊக்கமளிக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள்.

மீனம்: இனிய அனுபவத்தால் மனம் உற்சாகம் எழும். சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *