X

இன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 18, 2018

மேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும்.

ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும்.

மிதுனம்: முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபார நடைமுறையில் முழுஈடுபாடு செலுத்தவும்.

கடகம்: சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்வர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற அதிகம் பணிபுரிய நேரிடலாம்.

சிம்மம்: நண்பரின் உதவி கண்டு பெருமை கொள்வீர்கள். செயலில் புத்துணர்ச்சி வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்துவீர்கள்.

கன்னி: அறிமுகம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட தொந்தரவை சந்திக்கலாம்.

துலாம்: வாழ்வில் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும்.

விருச்சிகம்: பணிகளை திறம்பட செய்தால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும்.

தனுசு: திறமைகளை வளர்த்து கொள்வீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றி பெறும்.

மகரம்: அவமதிதவர் அன்பு பாராட்டுகிற நல்ல நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும்.

கும்பம்: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றலாம். தொழில் வியாபார வகையில் பொறுப்பு அதிகரிக்கும்.

மீனம்: சிலரது பேச்சால் சங்கடம் வரலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.