X

சிரஞ்சீவி படத்தின் 8 நிமிட காட்சிக்கு ரூ.54 கோடி செலவு செய்த தயாரிப்பாளர்

சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ஏற்கனவே 150 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. ஆங்கிலேய ஆட்சியை இந்தியாவில் இருந்து அகற்றுவதற்காக நடந்த முதல் புரட்சி என்று கருதப்பட்ட சிப்பாய் கலகத்துக்கு முன்பே ஆந்திராவில் உள்ள மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை உருவாக்கியவராக நரசிம்ம ரெட்டி கருதப்படுகிறார். நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். சுரேந்தர் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. ரூ.200 கோடி செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் இந்த படத்தை தயாரிக்கிறார். சண்டை காட்சிகளை அதிக செலவில் எடுத்துள்ளனர்.

படத்தில் 8 நிமிடம் இடம்பெறும் போர்க்கள யுத்த காட்சிகள் உள்ளன. இவை படத்தின் பிரதான காட்சிகளாக கருதப்படுகின்றன. இந்த 8 நிமிட போர்க்கள காட்சியை படமாக்க ரூ.54 கோடி செலவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரண்மனை அரங்குகளையும் அதிக செலவில் அமைத்துள்ளனர். வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இந்த படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். சிரஞ்சீவியின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.