வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னையில் கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், விருகம்பாக்கம், சாலிகிராமம், எழும்பூர், அயனாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இரவு முழுவதுமாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.