X

சென்னையின் பிரபல ஐ.ஏ.எஸ் அகடாமியின் நிறுவனர் தற்கொலை!

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் சங்கர். இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்தார். இந்த மையத்தில் சுமார் 1500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சங்கர் நேற்று இரவு தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சங்கர் தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.