மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தும் – மத்திய அமைச்சரின் பேச்சால் பரபரப்பு
மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி மற்றும் காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் ஆகியோர் பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஒளிபரப்பானது.
அந்த நிகழ்சியில் நிதின் கட்கரி கூறியதாவது, “கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை, அதனால் நாட்டு மக்களுக்கு பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஒருவேலை நாங்கள் ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் அதற்கு நாங்கள் பொருப்பேற்று இருக்க வேண்டியதில்லை.
ஆனால், மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள். அதனால், நாங்கள் அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என மக்கள் கேட்கிறார்கள். இப்போதைக்கு அதைப்பற்றி சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறோம்.” என தெரிவித்தார்.
நிதின் கட்கரி இப்படி வெளிப்படையாக பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைராலக பரவியது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் அந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நிதின் கட்கரி பேசிய அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘நீங்கள் கூறியவை அனைத்தும் சரியே’ என குறிப்பிட்டுள்ளார்.
सही फ़रमाया, जनता भी यही सोचती है कि सरकार ने लोगों के सपनों और उनके भरोसे को अपने लोभ का शिकार बनाया है| pic.twitter.com/zhlKTrKHgU
— Rahul Gandhi (@RahulGandhi) October 9, 2018