பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு அளிக்கும் பாலிவுட் நடிகர்கள்!
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்போது இந்தி நடிகர் நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு தான் சினிமாவில் அறிமுகமாகும் போது இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தன்னை ஆடையை களைந்து விட்டு ஹீரோ முன் நடனமாட கூறியதாக புகார் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தனுஸ்ரீ தத்தாவுக்கு பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
பர்கான் அக்தர் கூறி இருப்பதாவது:-
இந்த விவகாரங்கள் குறித்து தற்போது விவாதங்கள் நடைபெறுகிறுது. தனுஸ்ரீ 10 வருடங்கள் அமைதியாக இருந்த போதிலும் அவர் கதை எதையும் மாற்றவில்லை. அவரது தைரியம் பாராட்டப்பட வேண்டும், அவளுடைய எண்ணம் கேள்வி கேட்கப்படவில்லை.
இந்த துறையில் இருந்த மவுனத்தை உடைத்தற்கு நன்றி தனுஸ்ரீ தத்தா என பர்காத் தத்தா கூறி உள்ளார்.
ஒப்புக்கொள்கிறேன் .. உலகில் உயிர் பிழைக்க வேண்டும் என பிரியங்கா சோப்ரா கூறி உள்ளார்.
துன்புறுத்துதல் மற்றும் அச்சுறுத்தல் இல்லாமல் ஒரு வேலை முடிக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படை உரிமையாகும், இந்த துணிச்சலான பெண்ணைப் பேசுவதன் மூலம் நம் அனைவருக்கும் அந்த இலக்கை நோக்கி வழிநடத்த உதவுகிறது! என நடிகை டுவிங்கிள் கன்னா கூறி உள்ளார்.
மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் தனுஸ்ரீ தத்தாவிற்கு ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்கள்.