பீகாரில் பா.ஜ.க தலைவர் மகன் குத்தி கொலை

பீகார் மாநிலத்தில் உள்ளூர் பாஜக தலைவராக இருந்து வருபவர் கங்கோத்ரி பிரசாத். இவரது மகன் பியூஷ்குமார்.

இவர் நேற்று இரவு சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து, தங்களிடம் இருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினர்.

இதில் படுகாயம் அடைந்த பியூஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளும் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக பிரமுகரின் மகன் கொலை செய்யப்ப்பட்டுள்ளது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை நிரூபிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools