பிக் பாஸ் சீசன் 2 டைடிலை வென்ற ரித்விகா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 டிவி நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா வெற்றி பெற்றார்.

தொடர்பு வசதிகள் இல்லாத வீடு. பிரபலங்கள் சிலர் சில மாதங்கள் தங்க வேண்டும். அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். கண்காணிக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளில் சுவாரஸ்யம்(?) தருபவை மக்களுக்குக் காட்டப்படும். `பிக் பிரதர்’ என்று சர்வதேச அளவிலும், `பிக் பாஸ்’ என இந்தியாவிலும் ஒளிபரப்பாகிற இந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் கான்சப்ட் இது.

தமிழகத்துக்கு முதல் முறையாகக் கடந்த ஆண்டு வந்தது, இந்த நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2வது சீசன் தொடங்கப்பட்டு சென்ட்றாயன் வெளியேற்றம், ஐஸ்வர்யா எவிக்‌ஷனுக்கு வராதது, மகத் அட்டகாசம் என பல சர்ச்சைகளுக்கு இடையே இன்று நிறைவடைந்துள்ளது.

ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆரம்பமானது எவிக்‌ஷன் புராசஸ். ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கிய நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இடைப்போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் விஜயலட்சுமி.

ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் அனைத்து எவிக்சன்களையும் கடந்து இறுதிசுற்றுக்கு முன்னேறினர். ஜனனிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து விஜயலட்சுமியும் போட்டியில் இருந்து வெளியேற ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் இறுதி சுற்றில் மோதினார்கள்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா தட்டிச்சென்றார், ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு வெற்றிக்கோப்பையும், ரூ. 1 கோடி 60 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: Cinema news