பெல்காமில் சாலை விபத்து – 6 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சவுகத்தி பகுதியை சேர்ந்த 14 பேர் கோகாத் பகுதிக்கு ஜீப்பில் வந்தனர். அங்கு அவர்கள் தங்களது உறவினர் ஒருவருக்கு இறுதி சடங்கு காரியம் செய்துவிட்டு மீண்டும் ஜீப்பில் ஊருக்கு திரும்பினர்.

அப்போது ஹீரேனந்தி பகுதி அருகே வந்தபோது கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று எதிரே வந்து மோதியது.

இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயம் அடைந்தவர்களை கோகாத் மற்றும் பெல்காம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோகாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 6 பெண்களின் உடல்களை கைப்பற்றி கோகாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools