ஆசிய கோப்பை கிரிக்கெட் – 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த வங்காளதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுனின் பொறுப்பான ஆட்டத்தால் 48. 5 ஓவரில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 240 ரன்க்ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சில் சிக்கி பாகிஸ்தான் வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

இமாம் உல் ஹக் மட்டும் அரை சதம் அடித்தார். இறுதியில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த தோல்வி மூலம் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது.

பாகிஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்குள் மூன்றாவது முறையாக வங்காள தேசம் அணி நுழைந்துள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த 2012-ம் ஆண்டு மற்றும் 2014-ம் ஆண்டிலும் வங்காளதேசம் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் வங்காளதேசம் அணி பாகிஸ்தானுடனான 32 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வங்காளதேசம் அணி வெற்றி பெற்றது.

ஆனால், 2015ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற 4 போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது வங்காளதேசம் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools