X

வங்காளதேச பிரீமியர் லீக் – டேவிட் வார்னர் பங்கேற்பு

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர். தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பந்தை சேதப்படுத்திய வழக்கில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது.

இதனால் டேவிட் வார்னர் கரிபியன் பிரீமியர் லீக்கில் விளையாடினார். தற்போது உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் வங்காள தேசம் பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். டேவிட் வார்னர் சியல்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

ஏற்கனவே சியல்ஹெட் நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான சந்தீப் லாமிச்சேனை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணியில் வங்காள தேசத்தைச் சேர்ந்த லிட்டோன் தாஸ், சபீர் ரஹ்மான், நசிர் ஹொசைன், பாகிஸ்தானைச் சேர்ந்த சோஹைல் தன்விர் ஆகியோர் உள்ளனர்.