ஐ.எஸ்.எல் கால்பந்து – பெங்களூர், ஜாம்ஷெட்பூர் இடையிலான போட்டி டிராவானது!
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி நோக்கி பயணித்த நிலையில், கடைசி நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் செர்ஜியோ சிடோன்சா கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பெங்களூரு அணியில் நிஷூ குமாரும் (45-வது நிமிடம்), சுனில் சேத்ரியும் (88-வது நிமிடம்) கோல் போட்டனர்.
இந்த தொடரில் அடுத்த 10 நாட்கள் ஓய்வாகும். 17-ந் தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.