உயிருக்கு பயந்து கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்!

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். 29 ஒருநாள் போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரே போட்டியில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 9 முறை டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி ஜான் ஹேஸ்டிங்ஸ் கூறுகையில், ‘கடந்த 3 அல்லது 4 மாதங்களாகவே என் உடல் நிலையில் மாற்றம் தெரியத் தொடங்கியது. மிகவும் கடினமான காலக்கட்டமாக இருந்தது. ஒவ்வொரு முறை பந்து வீசத் தயாராகும் போதும் இருமல் வந்து ரத்த வாந்தி எடுத்தேன்.

இதனால் பவுலிங் செய்ய முடியவில்லை. எனவே இது என்ன என்று கண்டுபிடித்து தீர்வு காணாதவரை எனக்கு நிம்மதியில்லை. இது எனக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் இப்போது இதனை நான் கவலையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கடந்த 4 அல்லது 5 மாதங்களாக மிகவும் கடினமாக உள்ளது.

பவுலிங் செய்யும் போது நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்படாது என்று மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்காததால் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்’ என மன வேதனையுடன் அறிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools