X

ஆஸ்திரேலியா என்றாலே எப்போதும் சந்தோசமாக வருவேன் – ரோகித் சர்மா

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி அசத்தி வருபவர் ரோகித் சர்மா. 2018-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 16 இன்னிங்சில் (ஒருநாள் மற்றும் டி20) 560 ரன்கள் குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 148.93 ஆகும்.

டி20 போட்டியில் நான்கு சதங்கள் விளாசியுள்ள ரோகித் சர்மா, பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 ஆட்டம் எளிதானது அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியா என்றாலே நான் மகிழ்ச்சியாக இங்கே வருவேன் என்றார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ”பிரிஸ்பேன் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளத்தில் மிகவும் வேகமானது என்று கூறலாம். பெர்த்தில் உள்ள புதிய மைதானத்தில் நான் விளையாடியது கிடையாது. எப்போதெல்லாம் நாம் பிரிஸ்பேனில் விளையாடுகிறமோ, அப்போதெல்லாம் நமக்கு மிகப்பெரிய சவால்தான். பேட்டிட் யுனிட் இதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். இந்த முறை இதை மாற்ற விரும்புகிறோம்.

ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டி என்றாலே எனக்கு அது நல்ல நேரம்தான். பிரிஸ்பேன் மற்றும் பெர்த்தில் விளையாடும்போது பவுன்ஸ் அதிகமாக இருக்கும். சிறந்த பவுன்ஸ் பந்து என்னை, வழக்கமான ஆட்டத்தை விளையாட அனுமதிக்கும், ஏனென்றால், இந்தியாவில் சிமெண்ட் ஆடுகளத்தில் விளையாடி பயிற்சி பெற்றேன். அதனால் ஆஸ்திரேலியா என்றாலே எப்போதும் சந்தோசமாக வருவேன்.” என்றார்.