Tamilவிளையாட்டு

ஏடிபி பைனல் டென்னில்ஸ் – ஜான் இஸ்னெரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி

‘டாப் 8’ வீரர்கள் இடையிலான ஏடிபி பைனல் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ‘குகா குயர்டன்’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜோகோவிச் – ஜான் இஸ்னெர் ஒரு ஆட்டத்தில் மோதினார்கள். இதில் நம்பர் ஒன் வீரரா ஜோகோவிச் 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.

இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் -மரின் சிலிச் பலப்பரீட்சை நடத்தினார்கள்.இதில் இரண்டு செட்டுகளும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(7) – 7(6), 7(7) – 7(1) என அலெக்சாண்டர் கடும் போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *