X

ஆசிய கோப்பை கிரிக்கெட் – ஷிகர் தவான் – ரோகித் சர்மா ஜோடி சாதனை

ஷிகர் தவான்- ரோகித் சர்மா ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன் குவித்தது. இதன் மூலம் சேசிங்கில் தொடக்க விக்கெட்டுகள் அதிக ரன் எடுத்த இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்தது.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரக ஹேமில்டன் மைதானத்தில் காம்பீர்- ஷேவாக் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 201 ரன் (அவுட் இல்லை) குவித்ததே சாதனையாக இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த தொடக்க ஜோடி என்ற சாதனையை தவான்- ரோகித் சர்மா படைத்தனர். இதற்கு முன்பு கங்குலியும், தெண்டுல்கரும் தொடக்க ஜோடியாக 1998-ம் ஆண்டு டாக்காவில் 159 ரன் எடுத்ததை அவர்கள் கடந்தனர். ஒட்டு மொத்தத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் எடுத்த 2-வது ஜோடியாகும்.

1996-ம் ஆண்டு சார்ஜாவில் 2-வது விக்கெட்டுக்கு சித்துவும், தெண்டுல்கரும் 231 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது.