X

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி – அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா

5-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, ஓமன் ஆகிய 6 நாடுகள் பங்கேற்று உள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 11-0 என்ற கணக்கில் ஓமனையும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கிலும், 3-வது போட்டியில் ஜப்பானை 9-0 என்ற கணக்கிலும் வென்றது.

4-வது ஆட்டத்தில் மலேசியாவை நேற்று எதிர் கொண்டது. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ’டிரா’ ஆனது.

இதன் மூலம் 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகளை பெற்று இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது. இதேபோல மலேசியாவும் இதே நிலையில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென் கொரியாவை இன்று சந்திக்கிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

Tags: sports news