X

கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் – 31 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடத்தவந்தபோது மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஒரு தரப்பினர் பொங்கல் வைக்க முயன்றபோது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். கற்களை வீசி தாக்கினர். வாகனங்கள் மற்றும் வைக்கோல் போர்களுக்கு தீ வைத்தனர். இந்த மோதலில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மோதலைத் தொடர்ந்து தொப்பலாக்கரை கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோதலையடுத்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: south news