X

ஆந்திர மாநிலத்தில் தொடரும் ஆணவக் கொலைகள்!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நாகிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சைதன்யா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆவுலையா என்பவரின் மகள் இந்திரஜாவை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இந்திரஜாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில், கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் இந்துஜாவின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், தந்தை ஆவுலையா தான் தனது மகளை கொலை செய்து எரித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்துஜாவின் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தாழ்ந்த ஜாதி வாலிபரை காதலித்ததாக தனது மகளையே கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.