நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறினார். மீடூ இயக்கம் மூலம் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அர்ஜுன் ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்துள்ளனர்.
ஸ்ருதி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தான் திருமணமானவர் என்றும் கணவர் பெயர் ராம்குமார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் ஸ்ருதி தான் திருமணமானவர் என்று இதுவரை வெளிப்படுத்தியதே இல்லை. ஸ்ருதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கடந்த ஆண்டே ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால் ஸ்ருதி அதை மறுத்து வந்தார். போலீசில் புகார் செய்ததன் மூலம் ஸ்ருதி ரகசியத்தை வெளியிட வேண்டியதாகிவிட்டது.
பொதுவாக நடிகைகளுக்கு திருமணமானால் வாய்ப்புகள் குறைந்துவிடும். வாய்ப்புகளுக்காக ஸ்ருதி பொய் கூறியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
சுருதி பொய் சொன்னது வெளிப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தில் சுருதிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரியருக்காக பொய் சொன்னவரை இந்த விஷயத்தில் எப்படி நம்புவது? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.