ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்து நடனம் ஆடிய நயந்தாரா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. கநாநாயகனுக்கு ஜோடியாக மட்டுமே நடிக்காமல் கதாநாயகியை மட்டுமே கொண்டு உருவாகும் படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளான நேற்று, ஷாருக்கானுடன் அவர் நடித்த ஆல்பம் பாடலின் புரோமோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இந்திய ஹாக்கி அணியை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிற விதமாகவும் ‘ஜெய்ஹிந்த் இந்தியா…’ எனும் வீடியோ ஒன்று தற்போது உருவாகி உள்ளது.

ஷாருக்கான், நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இந்தப் பாடலில் ரகுமானுடன் இணைந்து ஸ்வேதா மோகன், டிரம்ஸ் சிவமணி, நீதி மோகன், சாஷா திருபாதி உள்ளிட்டோரும் பணியாற்றியுள்ளனர்.

குல்சார் பாடலின் வரிகளை எழுத ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த புரோமோ வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது யூடியூப் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools