உடல் எடையை குறைத்த பிறகே நடிப்பேன்- அனுஷ்கா

நடிகை அனுஷ்காவுக்கு பாகுமதி படத்துக்கு பிறகு புதிய படங்கள் இல்லை. எடை கூடி குண்டாக இருப்பதால் டைரக்டர்கள் புறக்கணிக்கிறார்கள். இதனால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று ஒல்லியாகும் முயற்சியில் இருக்கிறார். இந்த நிலையில் சினிமா வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

“நான் கதாபாத்திரத்துக்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு நான்தான் முதல் அடையாளம் என்கிறார்கள். பாகுபலி, பாகமதி போன்ற படங்கள் எல்லோருடைய மனதையும் தொட்டு விட்டது என்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்றும் சொல்கிறார்கள்.

என்னை நம்பி இந்த மாதிரி கதாபாத்திரங்களை கொடுத்த இயக்குனர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாபாத்திரத்தை உங்களால் செய்ய முடியும் என்று அவர்கள் தைரியமூட்டினார்கள். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

எடையை குறைக்கும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு இருக்கிறேன். முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையை குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்று எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools