மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த அனிருத்

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி, நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அமலாபால், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனிருத் தெரிவித்திருப்பதாவது,

`பாலியல் தொல்லைகள் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேசுவது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரம் குறித்து பலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டால் சம்பந்தப்பட்டவர்களின் உண்மை முகம் வெளிவரும்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools