ரயில்வே தயாரித்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்த அமிதாப் பச்சன்

மும்பையில் ரயில் விபத்துகளில் சிக்கி பலியானவர்கள் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான இந்த தகவலின் படி கடந்த 2013-ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்டு மாதம் வரை மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி 18 ஆயிரத்து 423 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 ஆயிரத்து 847 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய ரயில்வே வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த வீடியோவில் நடிகர் அமிதாப் பச்சன் ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். 2 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அமிதாப் பச்சன், பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல நடைமேம்பாலங்களை பயன்படுத்த வேண்டும், விதிமுறைகளை பின்பற்றுங்கள் என பொதுமக்களுக்கு அறிவுரை கூறுகிறார். மேலும் 2 வயதில் முதன் முதலில் பார்த்த ரயில் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools