செல்வாக்கு மிக்க இந்தியர்கள் பட்டியலில் அமிதாப் பச்சான், தீபிகா படுகோனே!

இன்புளூனர்சர் இன்டெக்ஸ் 2018 (YouGov Influencer Index 2018) செல்வாக்கு மிக்கவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், முதல் இடத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோனே அடுத்து மூன்றாவது நபராக தோனி உள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 4-வது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 60 பிரபலங்கள் குறித்து, உலகளவில் சுமார் 60 லட்சம் பேரிடம் ஆன்லைன் வழியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

5-வது இடத்தை நடிகர் அக்க்ஷய் குமார் பிடித்துள்ளார். அமீர்கானும், ஷாருக்கானும் முறையே 7-வது மற்றும் 8-வது இடத்தை பிடித்துள்ளனர். நடிகைகள் ஆலியா பட் 9-வது இடத்தையும், பிரியங்கா சோப்ரா 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools