அமிதாப் பச்சன், அமீர்கானை ஆட வைத்த பிரபு தேவா

பிரபுதேவா சமீபகாலமாக நடனம் மற்றும் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 6 படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபுதேவா, அமிதாப் பச்சன், அமீர்கான் நடிக்கும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் இடம்பெறும் பாடலுக்காக ஒரு நடனத்தை இயக்கி கொடுத்துள்ளார்.

அமிதாப்பும் அமீர்கானும் இணைந்து ஆடும் இந்த பாடலின் தமிழ் பதிப்பை மதன் கார்க்கி எழுதியுள்ளார். வாஷ் மாலே எனத் தொடங்கும் இந்த பாடலுக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 8-ந்தேதி வெளியாக இருக்கும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools