மாடல் அழகியான சாக்ஷி அகர்வால், ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து திருட்டி விசிடி, கககபோ, படங்களில் நடித்த இவர் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகையான இவர், தற்போது அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மேன்மை கொண்ட, உத்வேகம் தரக்கூடிய சிறந்த மனிதர். அவரை சந்தித்தது ஆசிர்வாதமாக என் வாழ்க்கை முழுவதும் மனதில் வைத்திருப்பேன். பெரிய ரசிகையாக உணர்ந்த தருணம் இது’ என்று அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியில் பதிவு செய்திருக்கிறார்.