ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் வெடிகுண்டு தாக்குதல் – ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
இதற்கிடையே, ஆப்கன் நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் மாகாணத்துக்கு உட்பட்ட ஜலாலாபாத் நகரின் அருகே அப்துல் நாசிர் முஹம்மது என்ற வேட்பாளர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக, ஐ.எஸ். அமைப்பினர் அமாக் செய்தி நிறுவனத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணியில் நடைபெற்ற தாக்குதலுக்கு நாங்களே காரணம் என தெரிவித்துள்ளனர்.