ஆப்கானிஸ்தானில் வேட்பாளர் மீது குண்டு வீசி தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் வருகிற 20-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஹெல்மண்ட் மாகாணத்தில் வேட்பாளர் குர்மான் என்பவர் தேர்தல் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் அமர்ந்திருந்த சோபாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. அதில் அவர் அதே இடத்தில் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றனர். தாக்குதல் நடைபெற்ற ஹெல்மண்ட் பகுதி பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்தது. தேர்தல் நடைபெறும் இக்கால கட்டத்தில் இதுவரை 10 வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools