டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை!

பிரபல இந்தி நடிகை ஷரத்தா கபூர். இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவரால் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஷரத்தா கபூர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: Cinema news