கஜா புயலால் பாதித்தவர்களுக்கு உதவ புதிய யோசனை கூறிய நடிகர் சிம்பு!

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

நடிகர் சிவகுமார் குடும்பம், ரஜினிகாந்த், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்தும், தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கியும் வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் சிம்பு வீடியோ மூலம் டெல்டா மக்களுக்கு உதவ செல் நெட்வொர்க் மூலமாக அனைவரும் உதவ புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools