90 எம்.எல் படம் மூலம் அடையாளம் பெற்ற வாரிசு நடிகர்!

90 எம்.எல் படத்தில் ரவுடி என்ற வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் தேஜ்ராஜ். இவர் பிரபல நடிகரான சரண்ராஜின் மகன். அப்பாவின் அடையாளத்தை வெளிக்காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

நடிப்பு பயணம் பற்றி தேஜ்ராஜ் கூறும்போது, ‘எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது பற்று உண்டு. நிறைய படங்களைப் பார்த்து சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அதோடு இல்லாமல் எஸ்.ஆர்.எம் காலேஜில் விஸ்காம் முடித்தேன். ரகுராம் மாஸ்டரிடமும், ஸ்ரீதர் மாஸ்டரிடமும் டான்சை முறைப்படி கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் கற்றுக் கொண்டேன். கூத்துபட்டறை, பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பள்ளி ஆகியவற்றில் நடிப்பை கற்றுக் கொண்டேன்.

90 எம்.எல் பட வாய்ப்பு கிடைத்தது. நடித்து படமும் வெளி வந்து எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இன்று என்னை பார்க்கிற பல பேருக்கு அடையாளம் தெரியுது. ஆட்டோகிராப் வாங்குறாங்க, கை கொடுக்கிறாங்க எனக்கு சந்தோஷமா இருக்கு. இன்னும் சாதிக்கனும்னு வெறி இருக்கு. அதற்கான முயற்சியில் இருக்கிறேன்.

நிறைய பேர் வில்லனா நடிப்பீங்களான்னு கேட்கிறாங்க. வில்லனா ஹீரோவாங்கிறது முக்கியமில்லை, பேர் வாங்கனும். அப்பா மாதிரி சினிமாவில நிலைச்சி நிக்கனும். அது தான் என் ஆசை.

நடிக்க நிறைய வாய்ப்பு வருது. கதை கேட்டுட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் எந்த படத்துல நடிக்கிறேன் என்பதை சொல்றேன்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools