Tamilசெய்திகள்

9 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – தேசியவாத காங்கிரஸ் மனு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகரிடம், தகுதி நீக்க மனு ஒன்றை நாங்கள் வழங்கி உள்ளோம். அதற்கான நகல்களை விரைவில் அனுப்புவோம். இந்த தகுதி நீக்க மனு அஜித் பவார் உள்பட 9 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியை விட்டுச் செல்கிறோம் என அவர்கள் எந்தவொரு நபரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது. அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம். அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.